கன்னட சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் நடிகர் யாஷ் (Yash). இவரின் நடிப்பில் குறைவான திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், ஒவ்வொன்றும் மிகவும் பிரம்மாண்டமாக வெற்றி பெற்றிருக்கிறது.
டாக்ஸிக் பட சர்ச்சைக்குரிய காட்சி குறித்து மனம் திறந்த யாஷ்:
அண்மையில் ஆங்கில நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த யாஷ், அதில் "இயக்குநர் கீது மோகன்தாஸ் தான் செய்யும் எல்லாவற்றிலும் ஒரு வலுவான உறுதியைக் கொண்டிருக்கிறார். ஆசையின் அளவு, சில உணர்ச்சிகள், காதல் அல்லது சிற்றின்பம் என ஒரு பெண் இயக்குநர் எப்படி முற்றிலும் வித்தியாசமாகக் கையாளுகிறார் என்பதை நான் டாக்ஸிக் திரைப்படத்தில் நான் உணர்ந்தேன். சமுத்திரக்கனியின் பிறந்தநாளை கொண்டாடிய அரசன் படக்குழு! பொதுவாக ஆக்ஷன் படங்கள் ஆண் இயக்குநர்களுக்கு மட்டுமே உரியவை. ஒரு பிரம்மாண்டமான ஆக்ஷன் படம், அதுவும் ஒரு பெண் இயக்குநரின் பார்வையில் எடுக்கப்பட்ட கேங்ஸ்டர் படம், மிகவும் புதியதாகவும் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது" என அதில் அவர் பேசியுள்ளார்.டாக்ஸிக் திரைப்படம் குறித்து நடிகர் யாஷ் வெளியிட்ட பதிவு:
இந்த டாக்ஸிக் படமானது கடந்த 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின் சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்திருந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், படமானது வரும் 2026 ஜூன் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதில் பல பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள நிலையில், நிச்சயம் சூப்பர் ஹிட் படமாக அமையும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

