சென்னை, ஏப்ரல் 05 : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்டிஏ கூட்டணியை விமர்சித்த மு.க.ஸ்டாலின்
மேலும் பேசிய அவர் திமுக ஆட்சியில் மதுரையில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கலைஞர் நூற்றாண்டு நூலகம், மேம்பாலங்கள், ஹாக்கி விளையாட்டு அரங்கம், புணரமைக்கப்பட்ட மதுரை வண்டியூர் பூங்கா போன்ற திட்டங்கள் மூலம் மதுரை வண்டியூர் பூங்கா, போன்ற திட்டங்கள் மூலம் மதுரையில்ன் வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றார்.மதுரையில் பேசிய மு.க.ஸ்டாலின்
அதனைத் தொடர்ந்து பேசிய அவர் தேசிய ஜனநாயக கூட்டணியை கடுமையாக விமர்சித்த அவர், ஆக்ரா, போபால், பாட்னா போன்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்பட்ட நிலையில், மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கு மறுப்பு தெரிவித்தது துரோகம் செய்திருக்கிறது. மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் பல ஆண்டுகளாக அறிவிப்பு அளவில் மட்டுமே இருந்து வருகிறது. இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என்றார். மேலும் பேசிய அவர், கீழடி ஆய்வறிக்கை வெளியீடு தாமதமாகி வருகிறது. தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான ஆய்வுகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. திராவிட மாடல் அரசு மக்கள் நலன், மத நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சியை முன்னிறுத்துகிறது. அதற்கு மாறகாக என்டிஏ கூட்டணி பிரிவினையை தூண்டி அரசியல் மேற்கொள்கிறது என்று குற்றம்சாட்டினார்.

