தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும், நடன இயக்குநராகவும் இருந்து வருபவர் பிரபுதேவா (Prabhu Deva).
வடிவேலு மற்றும் பிரபுதேவாவின் புதிய படத்தின் ஷுட்டிங் பூஜை பதிவு :
நடிகர் வடிவேலுவின் முன்னணி நடிப்பில் இறுதியாக மாரீசன் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அவர் நடிகர் ஃபகத் பாசிலுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2025, ஜூலை இறுதியில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் வடிவேலு மறதி நோயால் அவதிப்படும் கதாபாத்திரமாக நடித்திருந்தார். இதில் அவரின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. : தலைவர் நெக்ஸ்ட்.. கல்கி பட இயக்குநருடன் இணைகிறாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்? இந்த படத்தை அடுத்ததாக வடிவேலு தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வருவதாக கூறப்பட்ட நிலையில், இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் புதிய படத்தில், நடிகர் பிரபு தேவாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இந்த படத்தை கே.ஜி.ஆர். தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளாராம். தற்போது வெளியான இந்த அறிவிப்புகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் பிரபுதேவா நடித்துவரும் படங்கள் :
நடிகர் பிரபுதேவாவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் உருவாகிவருகிறது. இவர் கடந்த 2024ம் ஆனது வெளியான கோட் படத்தில் விஜயின் நண்பனாக நடித்திருந்தார். அதை அடுத்ததாக ஜாலி ஓ ஜிம்கானா என்ற படத்திலும் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவரின் நடிப்பில் தமிழில் பிளாஷ் பேக், சிங்காநல்லூர் சிக்னல், உல்ஃப் போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
