Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வெற்றிமாறன் கதை சொல்லும்விதம் வித்யாசமானது - நடிகர் சிலம்பரசன் ஓபன் டாக்

வெற்றிமாறன் கதை சொல்லும்விதம் வித்யாசமானது - நடிகர் சிலம்பரசன் ஓபன் டாக்

TV9 Tamil 5 months ago
மிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் அரசன்.
இயக்குநர் வெற்றிமாறன்  எழுதி இயக்கி வரும் இந்த அரசன் படத்தின் அறிமுக வீடியோவைப் படக்குழு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து சிம்புவின் நடிப்பைப் அந்த வீடியோவில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகர்கள் ஆண்ட்ரியா ஜெர்மையா, சமுத்திரகனி மற்றும் கிஷோர் ஆகியோர் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் விஜய் சேதுபதி அரசன் படத்தில் கேமியோ ரோலில் நடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியது. மேலும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டில் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் நாயகன் நடிகர் சிலம்பரசன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய போது இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் குறித்து பேசியுள்ளார். அது தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது.

வெற்றிமாறன் கதை சொல்லும்விதம் வித்யாசமானது:

நானும் வெற்றிமாறனும் நீண்ட நாட்களாக இணைந்து பணியாற்றத் திட்டமிட்டு வருகிறோம். விடுதலை-2 படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் சாருக்கு ஒரு இடைவெளி கிடைத்ததால், நாங்கள் அரசன் படத்தில் இணைந்தோம். அரசன் படத்தில் எனக்கு இரண்டு மூன்று கெட்டப்புகள் உள்ளன, அதற்காக நான் உடல் எடையைக் குறைத்துள்ளேன். நானும் அனிருத்தும் நீண்ட நாட்களாக இணைந்து பணியாற்றத் திட்டமிட்டு வருகிறோம், அரசன் படத்தில் அதற்கான சரியான நேரம் அமைந்தது. வெற்றிமாறன் சாருக்கு கதை சொல்லும் பாணியில் ஒரு தனித்துவம் உண்டு. அவர் என் மீது காட்டிய அன்பும் அக்கறையும் மிகவும் நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது என்று சிம்பு அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... கூலி படத்தில் அந்த 10 நிமிடம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது - சௌந்தர்யா ரஜினிகாந்த்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil