Dailyhunt
பட்ஜெட் 5 கோடி.வசூல் தருமாறு! 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் வசூல் நிலவரம்!

பட்ஜெட் 5 கோடி.வசூல் தருமாறு! 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் வசூல் நிலவரம்!

லையாள சினிமாவில் சமீபகாலமாக வெளியாகும் படங்கள் எல்லாம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆகி கொண்டு வருகிறது.

குறிப்பாக பிரேமலு, பிரம்மயுகம் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக 50 கோடிகளை தாண்டி இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

விண்ணை தாண்டி வருவாயா 'வாய்ப்பு போச்சு ரொம்ப நொந்துட்டேன்'- ஜனனி வேதனை!

அந்த ஹிட் வரிசையில் தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் கொஞ்ச நேரத்துல திக் திக் என கூறி வருகிறார்கள்.

நான் 'அம்மாவாக ஆசை படுகிறேன்'! பொன்னியின் செல்வன் நடிகை ஓபன் டாக்!

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கொடைக்கானலுக்கு ஒரு விடுமுறைப் பயணத்தில் நண்பர்கள் குழு எதிர்பாராத சாகசங்களை எதிர்கொள்வதனை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை சிதம்பரம் எஸ் என்பவர் இயக்கி உள்ளார். படத்தில் காலித் ரஹ்மான், காலித் ரஹ்மான், கணபதி எஸ் பொதுவால், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

read more – வயசானாலும் நான் வேற ரகம்! வீடியோவை இறக்கிவிட்ட 'இடுப்பழகி' சிம்ரன்!

இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 25 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் படம் 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post பட்ஜெட் 5 கோடி…வசூல் தருமாறு! 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் வசூல் நிலவரம்! first appeared on Dinasuvadu.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu