Narendra Modi: ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருகை தந்துக் கொண்டிருக்கிறார்.
தனி விமானம் மூலம் சென்னை நகருக்கு அவர் வந்தடைந்தார், பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு செல்கிறார். அங்கு ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விரைவு எரி பொருள் மறுசுழற்சி உலையை தொடங்கி வைக்கிறார். இது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. கல்பாக்கம் நிகழ்ச்சியை முடித்து கொண்டு ஹெலிகாப்டரில் சென்னை வருகிறார்.
– தண்டனையை எதிர்த்து பொன்முடி மேல்முறையீடு..! உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு
பின்னர் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வந்து இறங்குகிறார். தொடர்ந்து அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார், இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
The post ஒருநாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி..! first appeared on Dinasuvadu.

