Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
துணிவு vs வாரிசை தொடர்ந்து மீண்டும் மோதும் அஜித் - விஜய்.களைகட்ட போகும் திரையரங்கம்.!

துணிவு vs வாரிசை தொடர்ந்து மீண்டும் மோதும் அஜித் - விஜய்.களைகட்ட போகும் திரையரங்கம்.!

மீப காலமாக பழைய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது திரையரங்குகளில் டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில், தற்பொழுது வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, மின்னலே உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

READ MORE – வலிமையை போல் வாடும் விடாமுயற்சி.! நூதன முறையில் இறங்கிய அஜித் ரசிகர்கள்.!

இந்நிலையில், 2001ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அஜித்தின் சிட்டிசன், விஜய்யின் ஷாஜஹான் ஆகிய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதனால், இருவரின் ரசிகர்களும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

READ MORE – பட்ஜெட் 5 கோடி…வசூல் தருமாறு! 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் வசூல் நிலவரம்!

ஏற்கனவே, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை விஜய் நடித்த ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படமும் அஜித் நடித்த பில்லா படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

READ MORE – Raayan: இன்னும் யாரெல்லாம் இருக்காங்க? மிரட்டும் தனுஷின் 'ராயன்' காஸ்ட்.!

இந்த நிலையில், இந்த வாரம் வெள்ளிக்கிமை (மார்ச் 1ம் தேதி) அஜித்தின் ‘சிட்டிசன்’ மற்றும் விஜயின் ‘ஷாஜகான்’ ஆகிய படங்கள் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்படவுள்ளது. சொல்லப்போனால், கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விஜய் மற்றும் அஜித்தின் வாரிசு VS துணிவு பாக்ஸ் ஆபிஸில் மோதியது குறிப்பிடத்தக்கது.

சிட்டிசன்

இயக்குனர் சரவண சுப்பையா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டில் வெளியான ‘சிட்டிசன் படத்தில்’ நடிகர் அஜித், வசுந்தரா தாஸ், மீனா, நக்மா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். தேவா இசையமைக்கும் இந்த திரைப்டத்தில் அஜித் குமார் 9 வேடங்களில் நடித்திருந்தார்.

READ MORE – சம்பளம் இப்போ வேண்டாம்! வெங்கட் பிரபு படத்திற்கு சிவகார்த்திகேயன் போட்ட மாஸ்டர் பிளான்?

ஷாஜகான்

இயக்குனர் ரவியின் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ஷாஜகான்’ திரைப்படத்தில் விஜய், ரிச்சா பலோட், விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். மணிசர்மாவின் இசையமைத்த இந்த படத்துக்கு வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார்.

The post துணிவு vs வாரிசை தொடர்ந்து மீண்டும் மோதும் அஜித் - விஜய்…களைகட்ட போகும் திரையரங்கம்.! first appeared on Dinasuvadu.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu