Dailyhunt
உங்கள் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும். பிரதமர் மோடி உத்தரவாதம்!

உங்கள் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும். பிரதமர் மோடி உத்தரவாதம்!

டிக்கலும் நாட்டியும் வைத்தார். இதில் குறிப்பாக, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் திட்டம் உள்ளதவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

Read More – வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது… பிரதமர் மோடி பேச்சு!

அதேசமயம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டி வைத்த பிரதமர் மோடி, இந்தியாவின் முதல் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்ட, பயணிகள் கப்பலை கொடியசைத்து தொடங்கி வைத்தபின் உரையாற்றினார். இதன்பின் தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர் மோடி பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

பிரதமருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இவ்விழாவில் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திருநெல்வேலி அல்வாவை போன்ற இனிமையான உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு பணிவான வணக்கங்கள்.

Read More – தமிழகத்தில் 17 டி.எஸ்.பி நிலை அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்..!

தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தான் தமிழர்கள். தமிழ்நாடு மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையும், விசுவாசமும் எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம். பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஒரே எண்ணமாக இருந்து வருகிறது. தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பாஜக நிச்சயம் காப்பாற்றும் என உத்தரவாதம் அளிக்கிறேன். வருங்காலத்தை பற்றி மிக தெளிவுடன் இருப்பவர்கள் தமிழ்நாடு மக்கள்.

பாஜகவின் அணுகுமுறையும், சித்தாந்தமும் தமிழ்நாடு மக்களுடன் ஒத்துப்போகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது. மாற்று எரிசக்தி துறையில் உலகில் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது. பாஜக தான் தமிழ்நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி.

Read More – விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு!

உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள், அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள். இது மத்திய அரசின் செயல்பாடுகளால் தான் வருகிறது. வெளிநாட்டிற்கு செல்லும் இந்தியர்களை மற்ற நாட்டவர்கள் வியப்புடன் பார்க்கிறார்கள். மத்திய பாஜக அரசின் திட்டங்களால் உலகளவில் இந்திய மக்களுக்கான மரியாதை அதிகரித்துள்ளது.

மத்திய அரசு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது என பாஜகவின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டு மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது என கூறினார். மேலும் கூறியதாவது, தங்கள் குடும்பத்தை வளர்ப்பதற்காகவே, சிலர் ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள். குடும்ப அரசியல் தான் தலைதூக்கியுள்ளது. எந்த திட்டமும் இல்லாமல் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆனால், ஆட்சிக்கு வந்தால் யார் அமைச்சர் ஆவார்கள் என்ற திட்டம் மட்டும் அவர்களிடம் இருக்கிறது எனவும் குடும்ப அரசியல் குறித்து விமர்சித்தார்.

The post உங்கள் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும்… பிரதமர் மோடி உத்தரவாதம்! first appeared on Dinasuvadu.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu