வெலிக்கடை சிறைச்சாலையில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரின் குழந்தையே இவ்வாறு உயிரிழநத்துள்ளது.
தாய்ப்பால் தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவசியமான தலையீடு
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்த சம்பவம் குறித்து சிறைச்சாலை ஆணையாளர் ஊடாக விரிவான அறிக்கை ஒன்றைக் கோருவதற்கு பெண்கள் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்தோடு சம்பவத்துடன் தொடர்புடைய அவசியமான தலையீடுகளை மேற்கொள்வதற்கும் அநாதை நிலை அல்லது இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுப்பதைக் குறைத்துக் கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இலங்கை பெண்கள் பணியகத்திற்கும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்திற்கும் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

