Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பெரிய கனவு காண்பதே மாபெரும் வெற்றி! ஆசைகளை சாதனைகளாக மாற்றும் ரகசியம்!

பெரிய கனவு காண்பதே மாபெரும் வெற்றி! ஆசைகளை சாதனைகளாக மாற்றும் ரகசியம்!

Kalki Online 3 weeks ago

'நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகின்றான்' என்று பைபிள் கூறுகிறது.‌ ஒருவரைப் பார்த்து நாம் அவரைப்போல் உயர வேண்டுமென்றால், நாம் நம்மை வருத்திக்கொள்ளவும் செதுக்கிக் கொள்ளவும் வேண்டியுள்ளது‌.

உலக வெற்றியாளர்கள் அனைவருமே ஒரு சிறு ஆசை புள்ளியாக விழுந்ததில் விளைவாகவே வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள்.

நாம் எல்லோரும் புத்தரைப் பற்றி அறிவோம். 'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்றார் அவர். ஈஷா மையத்தின் தலைவரான ஜக்கி வாசுதேவ், 'அத்தனைக்கும் ஆசைப்படு!' என்று கூறுகிறார்‌. இதில் தவறு எதுவும் இல்லை.

ஆசைப்படுபவர்கள் மட்டுமே ஒரு காரியத்தில் ஆர்வமாக இறங்க முடியும். அதற்காகக் கடுமையாக உழைத்து தங்கள் இலக்கினை அடைய முடியும்‌. நாம் விரும்பியது நடக்கும் என்றால் அதற்கு ஆசைப்படுவதில் தவறு எதுவும் இல்லை. ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று புத்தர் கூறியதும் உண்மைதான்.

துன்பம் அடையாமல் எந்த ஆசையையும் அடைய முடியாது அந்த ஆசையை அடைய சில துன்பங்களையும் உடல் வலியையும் சந்தித்தே ஆகவேண்டும். ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். நமக்குள் ஆசைகள் அதிகமாக அதிகமாக நாமும் அதற்காக உழைத்து முன்னேறிச் செல்கிறோம்.

ஆசைப்படுவதில் இருவகை உண்டு. ஒரு சிலர் சின்னசின்ன ஆசைகளிலேயே திருப்தியடைந்து தங்களைச் சுருக்கிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள்.‌ ஆனால் பெரிய ஆசைகளை கொண்டவர்கள் அதை நோக்கிக் கடுமையாக உழைத்து வெற்றி பெறுகின்றனர்.

 வெற்றி

ஒருமுறை கல்லூரி மாணவராக பில்க்ளிண்டன் உட்கார்ந்திருக்கிறார். கல்லூரி விழாவிற்கு அன்றைய ஜனாதிபதி வருகை புரிந்திருக்கிறார் மாணவர்களுடன் கலந்துரையாடலில் மாணவர்களிடம் வருங்கால லட்சியங்கள் பற்றிக் கேட்க பில்க்ளிண்டன் முறை வரும்போது நான் உங்களைப்போல் ஜனாதிபதியாவேன் என்றாராம். அவர் வாக்குப்படி பில்க்ளிண்டன் அமெரிக்க ஜனாதிபதியானாரே‌! அதனால் ஆசைப்படுவதில் தாராளமாக ஆசைப்படுங்கள்.

சவால்களைச் சமாளிக்கும் மன உறுதி: இலக்கை அடைய உதவும் வழிகாட்டி!

'பெரிதினும் பெரிது கேள்' என்றார் தமிழ்ப்புலவர். பெரிதாக ஆசைப்படக் கற்றுக்கொள்ளுங்கள். சின்ன சின்ன ஆசைகளில் சுருங்கிக் போய்விடாதீர்கள். உயர உயரப் பறக்க ஆசைப்படுங்கள். அபோதுதான் நீங்கள் உச்சத்தை அடையமுடியும் ஆசைகளே எண்ணங்களாக மாறுகின்றன. நம் ஆசைகளே எண்ணங்களாகி நம்மைத் தொடர்ந்து உழைக்க வைக்கிறது. ஆசைகளை சபலங்கள், சலனங்கள் என்று கூறுவோர் உண்டு‌. ஆசைகளே தொடக்கப் புள்ளிகள். ஒரு புள்ளியாய் தொடங்கும் ஆசைதான் பெரிய வெற்றியை அடையச் செய்கின்றன.

நம் நடிகர் ரஜினியைப் பற்றி எல்லோரும் அறிவோம்.‌ அவருடைய தோற்றமும் நிறமும் தமிழ்த்திரை உலகில் ஒரு சிறந்த வில்லனாக விளங்கும் ஆசையுடன் வந்தார். திரைப்படக் கல்லூரி மாணவர்களை சந்திக்கும்போது சிவாஜி கெய்க்வாட் என்ற இவர் இயக்குனரை கவர பல மானரிசங்களைச் செய்தார். பாலசந்தர் அவரை அழைத்து, 'தம்பி! சினிமாவில் நடிக்கப் பழகிக்கொள். வாழ்க்கையில் நடிக்காதே' என்றார்.

பிறகு அவரே ரஜினிக்கு சான்ஸ் கொடுத்து அவரை சூப்பர் ஸ்டார் அஸ்தஸ்திற்கு உயர்த்திவிட்டார். இதற்குக் காரணம் பாலசந்தர் கூறிய சினிமாவில் நடி வாழ்க்கையில் நடிக்காதே என்பதை கடைபிடித்ததுதான்.

அவமானத்தை சாதனையாக மாற்றிய இளம் பெண்: உங்களது திறமையே உங்கள் அடையாளம்!

அதனால் பெரிதாக ஆசைப்படுங்கள். தரையிலேயே உங்களை முடக்கிவிடாதீர்கள் பறப்பதற்கு ஆசைப்படுங்கள்‌. உங்கள் இலட்சியம் இலக்கு இவற்றை நிச்சயம் அடையலாம்.

திசையைக் காட்டுவது மட்டும்தான் வெற்றியாளர்கள். ஆனால் பயணப்பட வேண்டியது நம் பணியாகும்.‌ இதைப்புரிந்து கொண்டவர்கள் தங்கள் எண்ணப்படி வெற்றியை நோக்கிப் பயணப்பட முயற்சிப்பவர்களே இங்கே வெற்றி பெறுகின்றனர்‌. உங்கள் முயற்சியும் உழைப்பும் ஆற்றலும் மிகச் சரியாக வெற்றியின் இருப்பிடத்தில் உங்களை அமரச்செய்து அழகு பார்க்கிறது.

இந்த கட்டுரையை வாசிப்பதன் மூலம், சிறிய ஆசைகளுடன் நின்றுவிடாமல் பெரிய கனவுகளை விதைத்து, தடைகளைக் கடந்து உங்கள் இலக்குகளை அடையும் தெளிவும், தொடர் உழைப்பிற்கான மன உறுதியும் உங்களுக்குக் கிடைக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online