தற்போதைய காலத்தில் நோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கு வாழ்க்கை முறை மாற்றங்கள் மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் முக்கிய காரணமாக உள்ளன.
குறிப்பாக துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குளிர் பானங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்.., எப்படி பயன்படுத்துவது?
தொடர்ந்து இந்த உணவுகளை உட்கொள்வது ஆயுட்காலத்தையும் குறைக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அந்தவகையில், ஆயுளை குறைக்கும் 5 உணவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

என்னென்ன உணவுகள்?
1. பதப்படுத்தப்பட்ட உணவுகள்- சிப்ஸ், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
2. குளிர்பானங்கள்- கார்பனேட்டட் பானங்களில் அதிகளவு சர்க்கரை இருப்பதால் இன்சுலின் எதிர்ப்பு, கொழுப்பு கல்லீரல், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
3. எண்ணெயில் பொரித்த உணவுகள்- எண்ணெயில் பொரித்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து, இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவதுடன் இதய நோய் அபாயமும் ஏற்படும்.
அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்றாழை எண்ணெய்.., எப்படி பயன்படுத்துவது?
4. உப்பு உணவுகள்- ஊறுகாய், கருவாடு போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். இதை சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.
5. உறைய வைக்கப்பட்ட இறைச்சி- உறைய வைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகமாக சாப்பிடுவது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

