பொதுவாக பெண்கள் அனைவரும் தங்களின் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
ஆனால் அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், இயற்கையான முறையில் முகத்தை பொலிவாக்க அரிசி மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

1. தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 1 ஸ்பூன்
- ஓட்ஸ் பொடி- 1 ஸ்பூன்
- பால்- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, ஓட்ஸ் பொடி, பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
வீட்டிலேயே பொலிவான முகத்தை பெற உதவும் பீட்ரூட்.., எப்படி பயன்படுத்துவது?
இந்த கலவையை முகத்தில் தடவி 8-10 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.
பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
2. தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 1 ஸ்பூன்
- சாக்லேட் பவுடர்- 1 ஸ்பூன்
- பால்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, சாக்லேட் பவுடர் மற்றும் குளிர்ச்சியான பால் சேர்த்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும்.

இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக்கை தினமும் பயன்படுத்தலாம்.
3. தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 15 உணவுகள்.., என்னென்ன உணவுகள்?
இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.
பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.

