இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவீத வாக்குகள் பதிவாயுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 19) 102 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆர்வமுடன் நிறைவேற்றி வருகின்றனர்.
இன்று காலை 7 மணி முதல் 3 மணி வரையில், 51.41 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், தற்போது 5 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 63.20 சதவீத வாக்குகள் தற்போது வரையில் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் 5 மணிக்கு பதிவான வாக்குகளின் நிலவரம் பின்வருமாறு,

- தர்மபுரி - 67.52%
- நாமக்கல் - 67.37%
- ஆரணி - 67.34%
- கள்ளக்குறிச்சி - 67.23%
- கரூர் - 66.91%
- சிதம்பரம் - 66.64%
- பெரம்பலூர் - 66.56%
- திருவண்ணாமலை - 65.91%
- சேலம் - 65.86%
- அரக்கோணம் - 65.61%
- வேலூர் -65.12%
- விழுப்புரம் - 64.83%
- கிருஷ்ணகிரி - 64.65%
- ஈரோடு -64.50%
- திண்டுக்கல் -64.34%
- நாகப்பட்டினம் - 64.21%
- கடலூர் - 64.10%
- நீலகிரி - 63.88%
- விருதுநகர் - 63.85%
- மயிலாடுதுறை - 63.77%
- பொள்ளாச்சி - 63.53%
- தேனி - 63.41%
- தென்காசி - 63.10%
- தூத்துக்குடி - 63.03%
- ராமநாதபுரம் - 63.02%
- தஞ்சாவூர் - 63.00%
- கன்னியாகுமரி - 62.82%
- சிவகங்கை - 62.50%
- திருச்சிராப்பள்ளி - 62.30%
- காஞ்சிபுரம் - 61.74%
- திருவள்ளூர் - 61.59%
- கோயம்புத்தூர் - 61.45%
- திருப்பூர் - 61.43%
- திருநெல்வேலி - 61.29%
- மதுரை - 60.00%
- ஸ்ரீபெரும்புதூர் - 59.82%
- சென்னை வடக்கு - 59.16%
- சென்னை சென்ட்ரல் - 57.25%
- சென்னை தெற்கு - 57.04
மேலும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் தேர்தலில் 5 மணி நிலவரப்படி, 56.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழக தொகுதிகளை பொறுத்தவரை தருமபுரி, நாமக்கல், ஆரணி ஆகிய தொகுதிகளில் அதிகமாகவும், சென்னையின் மூன்று தொகுதிகளில் குறைவாகவும் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
Lok Sabha Election 2024: விஜய் பாணியில் வந்து வாக்களித்த விஷால்
"மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்" : அண்ணாமலை
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: திருமா வலியுறுத்தல்!

