Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஒரே படம் தான். BMW கார் வாங்கிய சிவகார்த்திகேயன் இயக்குநர்

ஒரே படம் தான். BMW கார் வாங்கிய சிவகார்த்திகேயன் இயக்குநர்

Minnambalam 2 years ago

சிவகார்த்திகேயன் படத்தின் இயக்குநர் ஒருவர் BMW கார் வாங்கி இருக்கிறார். அதுகுறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

தமிழின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தன்னுடைய 23-வது படத்தில் நடித்து வருகிறார். அவரின் நடிப்பில் அடுத்ததாக அமரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்தநிலையில் சிவகார்த்திகேயனின் டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தற்போது விலையுயர்ந்த BMW காரினை வாங்கி உள்ளார்.

கடந்த 2௦22-ம் ஆண்டு சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் டான்.

2கே கிட்ஸ்களின் ஆதரவால் இப்படம் சுமார் 1௦௦ கோடி ரூபாயை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்தது. என்றாலும் இப்படத்திற்கு பிறகு சிபி சக்கரவர்த்திக்கு இன்னும் அடுத்த படம் அமையவில்லை.

இந்தநிலையில் சிபி தற்போது விலையுயர்ந்த BMW கார் ஒன்றினை வாங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்து, "புதிய கார் புதிய சாகசங்கள்" என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam