Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழ்நாடு - மக்களவை தேர்தல் : மதியம் 1 மணி நிலவரம்!

தமிழ்நாடு - மக்களவை தேர்தல் : மதியம் 1 மணி நிலவரம்!

Minnambalam 2 years ago

ன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாயுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 19) 102 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆர்வமுடன் நிறைவேற்றி வருகின்றனர்.

இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரையில், 23.72 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், தற்போது 1 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 40.05 சதவீத வாக்குகள் தற்போது வரையில் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் 1 மணிக்கு பதிவான வாக்குகளின் நிலவரம் பின்வருமாறு,

  1. தருமபுரி - 44.08%
  2. கள்ளக்குறிச்சி - 44.00%
  3. நாமக்கல் - 43.66%
  4. ஆரணி - 43.62%
  5. கரூர் - 43.60%
  6. பெரம்பலூர் - 43.32%
  7. சேலம் - 43.13%
  8. விழுப்புரம் - 42.89%
  9. விருதுநகர் - 42.34%
  10. ஈரோடு - 42.23%
  11. சிதம்பரம் - 42.09%
  12. திண்டுக்கல் - 41.97%
  13. அரக்கோணம் - 41.92%
  14. கிருஷ்ணகிரி - 41.55%
  15. திருவண்ணாமலை - 41.46%
  16. நாகப்பட்டினம் - 41.43%
  17. பொள்ளாச்சி - 41.34%
  18. வேலூர் - 41.24%
  19. தேனி - 41.24%
  20. திருப்பூர் - 40.96%
  21. தஞ்சாவூர் - 40.81%
  22. மயிலாடுதுறை - 40.77%
  23. கடலூர் - 40.32%
  24. கன்னியாகுமரி - 40.24%
  25. சிவகங்கை - 40.15%
  26. தென்காசி - 40.15%
  27. நீலகிரி - 40.14%
  28. திருவள்ளூர் - 40.12%
  29. திருச்சிராப்பள்ளி - 39.91%
  30. ராமநாதபுரம் - 39.60%
  31. கோயம்புத்தூர் - 39.51%
  32. காஞ்சிபுரம் - 39.41%
  33. தூத்துக்குடி - 39.06%
  34. திருநெல்வேலி - 38.27%
  35. ஸ்ரீபெரும்புதூர் - 37.40%
  36. மதுரை - 37.11%
  37. வடசென்னை - 35.09%
  38. தென்சென்னை - 33.93%
  39. மத்திய சென்னை - 32.31%

மேலும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் தேர்தலில் 1 மணி நிலவரப்படி, 35.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழக தொகுதிகளை பொறுத்தவரை தருமபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் ஆகிய தொகுதிகளில் அதிகமாகவும், சென்னையின் மூன்று தொகுதிகளில் குறைவாகவும் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

இந்து

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: திருமா வலியுறுத்தல்!

ஊழியர்களை நீக்கியது கூகுள்… ஏன் தெரியுமா?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam