Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆகஸ்ட் 2026 சூரிய மற்றும் சந்திர கிரகணம்: தேதி, நேரம் மற்றும் காணும் விவரங்கள்

ஆகஸ்ட் 2026 சூரிய மற்றும் சந்திர கிரகணம்: தேதி, நேரம் மற்றும் காணும் விவரங்கள்

Samayam Tamil 1 week ago

ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சிகள் மற்றும் சேர்க்கை எந்த அளவிற்கு முக்கியமாக கருதப்படுகிறதோ, அதே அளவிற்கு கிரகணங்கள் குறித்தும் கவனிக்கப்படுகிறது.

அந்த விதத்தில் ஆகஸ்ட் மாதத்தில் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஏற்படக்கூடிய தேதி மற்றும் நேரம், அது எங்கு பார்க்க முடியும், கிரகண நேரத்தில் செய்ய வேண்டிய எளிய விஷயங்களில் இங்கு தெரிந்து கொள்வோம்.


இந்த ஆண்டில் ஏற்கனவே ஒரு சந்திர மற்றும் சூரிய கிரகணம் நடந்து முடிந்த நிலையில், ஒரு ஆகஸ்ட் மாதத்தில் 12ம் தேதி சூரிய கிரகணம், தொடர்ந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி சந்திர கிரகணம் ஏற்படும் உள்ளன. குறிப்பாக இந்த சூரிய கிரகணம் ஆடி அமாவாசை நாளில் ஏற்படுகிறது. இந்த இரு கிரகணங்கள் எத்தனை மணிக்கு தொடங்கி - முடிகிறது, எங்கெல்லாம் பார்க்கலாம் போன்ற விஷயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.சூரிய கிரகணம் 2026

2026ம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12ஆம் தேதி புதன்கிழமை அன்று நிகழவு உள்ளது.
பொதுவாக ஜோதிடத்தில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிலும் இந்த அமாவாசை தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க, வழிபாடு செய்வதற்கான ஏற்ற நாளாக காலம் காலமாக கடைபிடித்து வரப்படுகிறது. இந்த விதத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நாளாக கருதப்படும் ஆடி அமாவாசை இந்த ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் கடக ராசியில் சூரியன் - சந்திரனின் சேர்க்கை நடக்க உள்ளது.
சூரியன் - சந்திரன் - பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்திய நேரப்படி இரவு 8:04 மணிக்குத் தொடங்கி, நள்ளிரவு 1:07 மணிக்கு முடிவடையும்.


சந்திர கிரகணம்

இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி சந்திரனின் ஒளி பொருந்திய பௌர்ணமி நாளில் ஏற்பட உள்ளது. ஆகஸ்ட் 28ஆம் தேதி நாளை காலை 6.53 மணிக்கு இந்த கிரகணம் தொடங்கி நண்பர்கள் 12:31:47 மணி வரை இந்த கிரகணம் நீடிக்க உள்ளது.
ஆவணி பௌர்ணமி திதி, ஆவணி அவிட்டம் என்ற விரத நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த அற்புத நாளில் சந்திர கிரகணம் காலை நேரத்தில் தோன்ற உள்ளது.
பகல் பொழுதில் இன்று சந்திர கிரகணம் ஏற்படுவது இந்தியாவில் இந்த கிரகணத்தை பார்க்க முடியாது.


சூரிய கிரகணம், சந்திர கிரகணம் இந்தியாவில் பார்க்க முடியுமா?

சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 9.04 மணிக்கு தொடங்குகிறது. இது ஆகஸ்ட் 13ஆம் தேதி நள்ளிரவு 1.27 மணி வரை நீடிக்கிறது. இரவு நேரத்தில் இந்த கிரகணம் ஏற்படுவதன் காரணமாக சூரிய கிரகணம் இந்தியாவில் பார்க்க இயலாது.
சந்திர கிரகணம் ஆகஸ்ட் 28ம் தேதி காலை 6.53 மணிக்கு தொடங்கி நண்பர்கள் 12.31 மணி வரை நீடிக்கும். இது பகல் நேரத்தில் நடப்பதால், இந்தியாவில் இந்த சந்திர கிரகணத்தை காண இயலாது.


ஆடி மாதத்தில் நிகழ்வதில் உள்ள சிறப்பு என்ன?

புராண ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த ஆடி அமாவாசை கருதப்படுகிறது. இந்த மாதத்தில் சிவபெருமான், தன்னுடைய துணையாக பார்வதி தேவையே ஏற்றுக்கொண்டார். சிவபெருமானை துணையாக அடைய பார்வதி தேவி 108 ஆண்டுகள் பூஜைகள் மற்றும் மந்திர ஜெபங்கள் செய்து தவம் புரிந்தார்.
இதன் காரணமாக இந்த மாதத்தை சிவபெருமானுக்கும், அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள் கடைபிடிக்கப்படுகிறது.இந்த அற்புத நாளில் உண்மையான மனதுடன் சிவபெருமானே வழிபாடு செய்வதால் உங்களுடைய அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.


கிரகண நேரத்தில் என்னென்ன செய்யலாம்?

சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் நேரத்தில் இறைவனுடைய திருநாமங்களையும், திருப்புகழ், சிவபுராணம் போன்ற நூல்களை படிப்பது மிகவும் சிறப்பான பலனைத் தரும். இந்த கிரகணம் நாளில் அமாவாசை நாளில் முன்னோர்களின் அமைதிக்காகவும் மற்றும் பௌர்ணமி தினத்தில் தான தர்மங்களை செய்வதும் நல்லது.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil