1. தங்கம் மற்றும் வெள்ளி விலை
புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் சர்வதேச சந்தை மாற்றங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
அதன்படி, இன்று (ஏப்ரல் 4) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ. 13,950 ஆகவும், ஒரு சவரன் ரூ. 1,11,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று சவரனுக்கு சுமார் 800 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2. காய்கறி விலைகள்
கோடை வெயில் காரணமாக உழவர் சந்தைகளில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் வரத்து குறைந்துள்ளதால் விலையில் லேசான ஏற்றம் காணப்படுகிறது. உதாரணமாக, மரவள்ளிக்கிழங்கு தரம் மற்றும் ஊரைப் பொறுத்து கிலோ ரூ. 22 முதல் ரூ. 47 வரை விற்பனையாகிறது. சென்னையில் இன்று ஒரு கிலோ அவரைக்காய் ரூ. 70 முதல் ரூ. 130 வரை விற்பனையாகிறது. ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாய்க்கும், ஒரு கிலோ உருளைக் கிழங்கு 13 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
3. தேர்தல் கட்டுப்பாடுகள்
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ஆவணங்கள் இல்லாமல் 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கம் கொண்டு செல்வதை தவிர்க்க நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் முடிந்த அளவுக்கு நிலம் வாங்குவது, நகை வாங்குவது போன்ற பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளை தேர்தல் கட்டுப்பாடு விதிமுறைகள் இருக்கும் வரை தவிர்ப்பது நல்லது.
4. பங்குச் சந்தை விடுமுறை
நேற்று (ஏப்ரல் 3) புனித வெள்ளி என்பதால் இந்திய பங்குச் சந்தைகளான NSE மற்றும் BSE விடுமுறை அளிக்கப்பட்டன.இன்று சனி மற்றும் நாளை ஞாயிறு வார விடுமுறை என்பதால், மீண்டும் திங்கள் கிழமை (ஏப்ரல் 6) அன்றுதான் வர்த்தகம் தொடங்கும்.
அவசரத்துக்கு பணம் தேவை.. PF அமவுண்டை இப்படி ஈசியா எடுக்கலாம்.. டிரை பண்ணி பாருங்க!
5. வங்கிகள் இயங்கும்
புனித வெள்ளியை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 3) வங்கிகளுக்கு விடுமுறை இருந்தது. ஆனால் இன்று வங்கிகள் வழங்கம்போல செயல்படும். அதேபோல, ஏடிஎம் மற்றும் ஆன்லைன் பேங்கிங் சேவைகளும் தடையின்றி கிடைக்கும்.
6. பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் இன்று (ஏப்ரல் 4) பெட்ரோல் ஒரு லிட்டர் 100.80 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று மற்ற மாவட்டங்களிலும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.
ரயில்களில் அடிக்கடி போகும் மக்கள் கவனத்துக்கு.. ரூல்ஸ் எல்லாம் மாத்திட்டாங்க.. பாத்துட்டு அப்பறமா போங்க
7. சிலிண்டர் விலை
ஏப்ரல் மாதம் முழுவதும் சிலிண்டர் விலை ஒரே மாதிரியாகவே இருக்கும். ஒருவேளை திடீரென்று அரசு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்தால் மட்டுமே புதிய விலைகளில் சிலிண்டர் கிடைக்கும். முன்னதாக, ஏப்ரல் 1ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 200 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை.

