Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அன்பே சிவம் படத்திற்கு நோ சொல்ல இதுதான் காரணம் - கே.எஸ்.ரவிக்குமார்

அன்பே சிவம் படத்திற்கு நோ சொல்ல இதுதான் காரணம் - கே.எஸ்.ரவிக்குமார்

TV9 Tamil 1 month ago
மிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். இவரதி இயக்கத்தில் வெளியான படங்கள் பல தற்போது 90ஸ் கிட்ஸ்களின் நாஸ்டாலஜியாவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிக அளவில் கொடுத்துள்ளார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.  இவர் கடந்த சில ஆண்டுகளாக படங்களை இயக்குவதில் இருந்து விலகி தற்போது அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி இறுதியாக கே.எஸ்.ரவிக்குமார் லவ் ஓ லவ் என்ற படத்தின் பவிஷ் நாராயணின் தந்தையாக நடித்து இருந்தார். அவரது நடிப்பை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவர் அதிக அளவில் தற்போது மற்ற இயக்குநரின் படங்களில் நடித்து உள்ளார். ஆனால் முன்பு எல்லாம் கே.எஸ்.ரவிக்குமார் அவரே எழுதி இயக்கும் படங்களில் ஒரு சூப்பரான கேரக்டரில் கேமியோ செய்வார். அது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் கதாப்பாத்திரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அன்பே சிவம் படத்திற்கு நோ சொல்ல இதுதான் காரணம்:

அந்தப் பேட்டியில் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது, தற்போது அன்பே சிவம் படத்தை ஒரு கல்ட் கிளாசிக் (cult classic) என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் இப்படத்தைத் தயாரிக்க நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால், படத்தின் க்ளைமாக்ஸ் (climax) எனக்குத் திருப்தியளிக்காததால் அந்த முடிவைக் கைவிட்டேன். அக்காலகட்டத்தில், மோகன்லால் சார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வகையிலேயே அன்பே சிவம் படத்திற்கான திட்டமிடலும் இருந்தது என்று தெரிவித்து இருந்தார். கே.எஸ்.ரவிக்குமார் கூறுவது போல தமிழ் சினிமாவில் பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது அது பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று இருக்காது. மேலும் அந்தப் படம் தோல்வியையும் சந்தித்து இருக்கும். ஆனால் அதே படம் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் படத்தை கொண்டாடுவது மட்டும் இன்றி அதனை கல்ட் படம் என்றும் கொண்டாடி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ... தெலுங்கு சினிமாவில் வித்யாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ரவி மோகன்?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil