Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ராம் இன் லீலா படத்திலிருந்து வெளியானது 2-வது சிங்கிளான செப்புச் சிலை!

ராம் இன் லீலா படத்திலிருந்து வெளியானது 2-வது சிங்கிளான செப்புச் சிலை!

TV9 Tamil 1 month ago
மிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் ரியோ ராஜ். சின்னத்திரையில் இருக்கும் போதே தனக்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திய நடிகர் ரியோ ராஜ் தற்போது வெள்ளித்தியையில் நடிக்கத் தொடங்கிய பிறகு அந்த ரசிகர்களின் பட்டாளம் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளித்திரையில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் பெரிய அளவில் இவரது படங்கள் வெற்றியை சந்திக்கவில்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகரக்ளிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் ஆண் பாவம் பொல்லாதது என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் விவாகரத்திற்காக செல்லும் தம்பதிகள் இடையே நடைபெறும் விசயம் மற்றும் அந்த விவாகரத்து வழக்கில் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசியது பலரு மணதில் இருந்த பாரமே கொரஞ்சது என்று கூறும் அளவிற்கு இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ராம் இன் லீலா.

ராம் இன் லீலா படத்திலிருந்து வெளியானது செப்புச் சிலை பாடல்:

இந்தப் படத்தை இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரியோ ராஜ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அன்கித் மேனன் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து செப்பு சிலை என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் புற்றுநோயால் காலமானார்!

ராம் இன் லீலா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil