கோலிவுட் சினிமாவில் பிரபலமான மற்றும் மக்களுக்கு நெருக்கமான இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் எச்.வினோத் (H Vinoth).
தயாரிப்பாளராக புதிய அவதாரத்தை எடுக்கும் இயக்குநர் எச்.வினோத்:
இயக்குநர் எச். வினோத், இயக்குநராக பல பிரம்மாண்டமான படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் இவர் தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரத்தை எடுக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இவர் தயாரிக்கவுள்ள முதல் படத்தை அவரின் உதவி இயக்குநர் இயக்கவுள்ளதாகவும், அதில் நடிகர் நட்டி நடராஜன் நாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படமானது சிறிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இணையத்தில் வைரலாகும் கான் சிட்டி படத்திலிருந்து வெளியான ஃப்ராடு பயலே பாடல்எச். வினோத் தயாரிக்கும் புதிய திரைப்படம் குறித்து வைரலாகும் பதிவு:
இயக்குநர் எச்.வினோத், 2014ம் ஆண்டில் வெளியான சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்க அடுத்தடுத்து படங்களை இயக்க தொடங்கினார். இவ்வாறு எச்.வினோத் நட்டி நடராஜை வைத்து முதல் படத்தை இயக்கி ஹிட் கொடுத்த நிலையில், அதே போலவே அவரின் உதவி இயக்குநரும் நட்டி நடராஜை வைத்து முதல் படத்தை இயக்கவுள்ளாராம். இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

