தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படம் தான் இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பி நிறுவனமான வேல்ஸ் இண்டர்நேஸ்ஷனல் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 30-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் இந்தப் படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் மமிதா பைஜூ உடன் இணைந்து நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டியராஜன் மற்றும் ஜெயராம் என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதில் முன்னதாக நடிகர்கள் மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சரமூடு, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் ஆகியோரின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது.
ஜெயராம் - பிரித்வி பாண்டியராஜனின் கதாப்பாத்திர போஸ்டர்கள் இதோ:
இந்த நிலையில் இன்று கர படத்தில் நடித்துள்ள நடிகர்கள் ஜெயராம் மற்றும் பிரித்வி பாண்டியராஜனின் கதாப்பாத்திர போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஜெயராம் முத்து செல்வன் என்ற கதாப்பாத்திரத்திலும் நடிகர் பிரித்வி பாண்டியராஜன் முருகேசன் என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளதாக கர படக்குழு அதிகராப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... ஜெயம் ரவிக்கும் - ரவி மோகனுக்கும் உள்ள வித்யாசம் என்ன? அவரே சொன்ன விசயம்கர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

