Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜூலை 31-க்குள் இதை செய்யாவிட்டால் ரூ.5,000 அபராதம்.. கவணத்தில் கொள்ளுங்கள்!

ஜூலை 31-க்குள் இதை செய்யாவிட்டால் ரூ.5,000 அபராதம்.. கவணத்தில் கொள்ளுங்கள்!

TV9 Tamil 3 weeks ago
ந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி தாக்கல் (Income Tax File) செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
அந்த வகையில், 2026 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய சீசன் தொடங்கியுள்ளது. வருமான வரி தாக்கல் சீசனுக்காக வருமான வரித்துறையும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஐடிஆர் - 01, ஐடிஆர் - 02 ஆகிய படிவங்களை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கான கடைசி தேதியாக ஜூலை 31, 2026 உள்ளது. இதுவே, தணிக்கை செய்ய தேவை இல்லாத ஐடிஆர் - 03 மற்றும் ஐடிஆர் - 04 ஆகிய படிவங்களை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு கடைசி தேதியாக ஆகஸ்ட் 31, 2026 உள்ளது.

இந்த விஷயங்களை தெரிந்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

வருமான வரியை எந்த எந்த தேதிகளில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை தாண்டி சில விஷயங்கள் உள்ளது. அவற்றை தெரிந்துக்கொள்வதன் மூலம் சிறப்பு பலன்களை பெற முடியும்.
  • ஃபார்ம் 26AS மற்றும் வருடாந்திர தகவல் அறிக்கையை ஒருமுறை சரிபார்த்துக்கொள்வது அவசியமாக உள்ளது.
  • வரி செலுத்துவோர் தகவல் சுருக்கத்தில் ஏதேனு  முரண்பாடு இருந்தால், அதனை உடனே சரிசெய்வது நல்லது.
  • வங்கி கணக்கை முன்கூட்டியே சரிபார்த்து வைத்தால், ரீஃபண்ட் தொகை நேரடியாக உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேர்ந்துவிடும்.

7 நாட்களுக்கு மேலாக முடக்கப்பட்ட EPFO இணையதளம்.. எப்போது பயன்பாட்டுக்கு வரும்.. முக்கிய தகவல்!

முன்கூட்டியே வரி தாக்கல் செய்வதற்கான பலன்கள்

  • முன்கூட்டியே வரி தாக்கல் செய்வதன் மூலம், நான்கு வாரங்களுக்குள்ளேயே வருமான வரி ரீஃபண்ட் தொகையை பெற முடியும்.
  • அதேபோல வரிதாக்கல் செய்த அடுத்த 30 நாட்களுக்குள்ளாகவே இ-வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ஒருவேளை இ-வெரிஃபிகேஷன் செய்யவில்லை என்றால் வரித்தாக்கல் செய்யாததாக கருதப்படும்.

அமலுக்கு வந்தது புதிய 2026 EPFO.. முக்கிய மாற்றங்கள் என்ன என்ன.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

ஒருவேளை பொதுமக்கள் இந்த கால நேரத்திற்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil