Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கருப்பு படத்தில் கேமியோ செய்ததற்கு ஆர்யாவிற்கு நன்றி கூறிய ஆர்.ஜே.பாலாஜி

கருப்பு படத்தில் கேமியோ செய்ததற்கு ஆர்யாவிற்கு நன்றி கூறிய ஆர்.ஜே.பாலாஜி

TV9 Tamil 1 month ago
மிழ் சினிமாவில் கடந்த 2026-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கருப்பு. இந்தப் படத்தினை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி இருந்த நிலையில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்தார்.
தற்போதையக காலத்திற்கு ஏற்ற மாதிரியான ஒரு சாமி படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. இந்தப் படத்தில் நீதிமன்றத்தில் நீதி கிடைக்காதவர்களுக்காக கருப்பு சாமியே இறங்கி வந்து உதவுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா கருப்பு சாமியாக நடித்து இருந்தார். அவர் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் கருப்பு படத்தில் முன்னதாக வெளியான பலப் படங்களின் வைரல் காட்சிகள் அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்றுதான் லியோ படத்தில் வரும் சாக்லேட் காஃபி காட்சி. இப்படி பல காட்சிகள் எடுக்கப்பட்டு அதில் பல எடிட்டிங்கில் தூக்கப்பட்டு இருந்தது. இப்படி ஆர்யா நடித்த காட்சி கருப்பு படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. அது குறித்து ஆர்யா பேசி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடித்ததற்காக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி அவருக்கு நன்றி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்யாவிற்கு நன்றி கூறிய ஆர்.ஜே.பாலாஜி:

கருப்பு (Karuppu) படத்தில் ஒரு சிறிய காட்சியில் (cameo) தோன்ற ஒப்புக்கொண்டதற்கு ஆர்யாவுக்கு மிக்க நன்றி. சூர்யா சார் காரை வெட்டிச் செல்லும் துரத்தல் காட்சியில் ஆர்யாவும் அவரது முழு சைக்கிளிங் குழுவும் இடம்பெறுவதாக இருந்தது; அவர் சுமார் 15-20 வினாடிகள் திரையில் தோன்றுவார். பல்வேறு காரணங்களால் அந்தக் காட்சியை நீக்குவதாக ஆர்யாவிடம் தெரிவித்தபோது, ​​அவர் அதை மிகவும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். அவரது குழுவினரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்து இருந்தார். அது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... யோகி பாபுவின் அர்ஜுனன் பேர் பத்து படத்திலிருந்து வெளியானது முதல் சிங்கிள்

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil