தெலுங்கு சினிமாவில் உச்ச இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி (SS Rajamouli). இவரின் இயக்கத்தில் பாகுபலி (Baahubali), நான் ஈ, மாவீரன் என பல்வேறு படங்கள் வெளியாகியுள்ளது.
வாரணாசி திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி:
அதில் ராஜமௌலி பேசுகையில், "கதை சொல்வதற்கு மொழித்தடை இல்லை. உணர்ச்சியும் மனித அனுபவமும் மட்டுமே முக்கியம். அவையே எனது அடுத்த படத்தின் அடித்தளம், இது எனது மிகவும் லட்சியமான திட்டம் என தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. முதல் பாகத்தை விட ஜெயிலர் 2 படம் மாபெரும் வெற்றியைப் பெறும் - நடிகர் யோகி பாபுவாரணாசி திரைப்படம் குறித்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிட்ட எக்ஸ் பதிவு:
வாரணாசி படத்தின் ரிலீஸ் எப்போது:
இந்த வாரணாசி படத்தில் பல்வேறு பான் இந்திய நடிகர்கள் நடித்துவருகிறார்கள். அதிலும் குறிப்பாக பல தெலுங்கு நடிகர்கள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தீவிரமாக இருந்துவரும் நிலையில், படமானது கிட்டத்தட்ட 2ஆண்டுகளாக தயாராகிவருகிறது. அந்த வகையில் இன்னும் சில மாதங்களில் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தை வரும் 2027ம் ஆண்டு மார்ச் 27ம் தேதியில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துவருகிறது.
