தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 40 வயதை கடந்தும், படங்களில் கதாநாயகியாக தொடர்ந்து நடித்துவருபவர் நடிகை நயன்தாரா(Nayanthara).
சல்மான்கானுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம்:
பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். இவர் வாரிசு பட இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்திலும், தில்ராஜுனின் தயாரிப்பிலும் புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த படமானது முற்றிலும் ஆக்ஷன் பேமிலி கதைக்களத்தில் தயாராகவுள்ளதாம். இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை நயன்தாரா கிட்டத்தட்ட ரூ 11 கோடியை சம்பளமாக கேட்டுள்ளாராம். அந்த படத்தில் நிறைய ட்ரோல்.. நான் பயங்கரமா அழுதேன் - மௌனம் உடைத்த ரச்சிதா! பாலிவுட் நடிகைகள் நடிப்பதற்கே ரூ 10 கோடிகள் மட்டுமே கேட்டுக்கும் நிலையில், நடிகை நயன்தாரா ரூ 11 கோடிகளை சம்பளமாக வாக்கியுள்ளாராம். இவர் இந்தியில் இறுதியாக ஜவான் படத்தில் நடித்திருந்த நிலையில், அதற்கு பின் இப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் காரனமாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது.சல்மான்கானுடன் இணையும் புது படம் குறித்து நயன்தாரா வெளியிட்ட எக்ஸ் பதிவு:
நயன்தாரா தமிழ் மூக்குத்தி அம்மன் 2, மண்ணாங்கட்டி, டாக்ஸிக், பேட்ரியாட், ராக்காயி, ஹாய் போன்ற படங்களிலும் தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் புது படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் தற்போது இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 7 படங்களுக்கும் மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இந்த 2026ம் ஆண்டில் கிட்டத்தட்ட 5 படங்களுக்கும் மேல் வெளியாகவுள்ளது. இந்த படங்கள் மூலம் மேலும் நயன்தாராவிற்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

