நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என தான் கையில் எடுத்த அனைத்து துறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் பிரபு தேவா (Prabhu Deva).
போலீஸ் அதிகாரியாக பிரபு தேவா
பொன் மாணிக்கவேல் படத்துக்கு பிறகு நடிகர் பிரபு தேவா போலீஸ் அதிகாரியாக களமிறங்கியிருக்கிறார். இந்த தொடர் குறித்து பேசிய பிரபு தேவா, சேதுராஜன் ஐபிஎஸ் என்பது சாதாரண காவல் அதிகாரி கதாப்பாத்திரம் அல்ல. கடமை, அடையாளம் மற்றும் அரசியல் எனும் புயலில் சிக்கித் தவிக்கிற மனிதரின் கதை. இந்த கதை தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது. இந்தத் தொடரில் காவல்துறை அதிகாரியாக நடிப்பதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். வடிவேலு - பிரபுதேவாவின் கூட்டணி.. வெளியானது புதிய படத்தின் அசத்தல் அறிவிப்பு!சேதுராஜன் ஐபிஎஸ்
நடிகர் பிரபு தேவா விஜய்யுடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். குறிப்பாக எதிர்மறை வேடத்தில் வேடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இதனையடுத்து பிரபு தேவா நடிப்பில் கடைசியாக தமிழில் பேட்ட ராப் திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் காத்தனர், தமிழில் சிங்காநல்லூர் சிக்னல், வோல்ஃப், ஹிந்தியில் மஹாரானி போன்ற படங்களில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜின் LCUவில் இணைந்த வாத்தி பட நடிகை.. வைரலாகும் போஸ்டர்!
இயக்குநராக பிரபு தேவா
நுவொஸ்தனன்டே நேனொன்டா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரபு தேவா. இந்தப் படம் தான் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உனக்கும் எனக்கும் என்ற பெயரில் வெளியாகியிருந்தது. மேலும் தமிழில் விஜய் நடிப்பில் போக்கிரி, வில்லு, ஜெயம் ரவி நடிப்பில் எங்கேயும் காதல், விஷால் நடிப்பில் வெடி ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
