Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ரியோவின் சூப்பர்ஹிட் பட இயக்குநருடன் இணையும் நடிகர் ஜீவா? வைரலாகும் தகவல்

ரியோவின் சூப்பர்ஹிட் பட இயக்குநருடன் இணையும் நடிகர் ஜீவா? வைரலாகும் தகவல்

TV9 Tamil 1 month ago
மிழ் சினிமாவில் பிரபல நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் ஜீவா நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் ஜீவா நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் தலைவர் தம்பி தலைமையில் படத்தில் நடித்து இருந்தார். தமிழ் சினிமாவில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிகை வரலட்சுமி சரத்குமார் எழுதி இயக்கிய சரஸ்வதி என்ற படத்தில் கேமியோ வேடத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவா தற்போது தமிழ் சினிமாவில் ஜாலியா இருந்த ஒருத்தன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் ராஜேஷ் எழுதி இயக்கி உள்ளார். இவர்களின் கூட்டணியில் முன்னதாக வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் ஜீவா நடிப்பில் உருவாக உள்ள அடுத்தப் படம் குறித்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆண் பாவம் பொல்லாதது பட இயக்குநருடன் இணையும் நடிகர் ஜீவா:

இந்த நிலையில் நடிகர் ஜீவா அடுத்ததாக நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஆண் பாவம் பொல்லாதது படத்தின் இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் கலையரசன் தியாகராஜன் இரண்டாவதாக நடிகர் ஜீவா படத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது. ... ஓம் படத்தின் ஷூட்டிங் நிலவரம் என்ன? இணையத்தில் வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil