தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
சிலம்பரசன் - அஸ்வத் மாரிமுத்துவின் படம் ஒத்திவைக்கப்பட்டதா?
படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதா என்று தயாரிப்பாளரிடம் கேட்ட கேள்விக்கு அவர், இல்லை, அது துளியும் உண்மையல்ல. சிம்பு தற்போது அரசன் படத்தின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அஸ்வத் இன்னும் திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் இருக்கிறார். இந்த இயக்குநர்கள் தாங்கள் எழுதுவதில் மிகுந்த துல்லியத்துடனும் கவனத்துடனும் இருப்பார்கள். மேலும், தங்கள் மனதில் உள்ள அந்தக் காட்சியமைப்பை அப்படியே திரையில் கொண்டு வருவார்கள். பிரதீப் விஷயத்திலும் இதுவேதான் நடந்தது. அவர் எழுதியதை அப்படியே, மிகச் சரியாகப் படமாக்கினார். மேலும், நாங்கள் நிறைய புத்தகங்களைப் படிப்பதையும் அவர்கள் ஊக்குவிக்கிறார்கள். அட்லியிடமிருந்து நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்; அதேபோலவே, இவர்களிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது. ... எல்கேஜி படத்தில் அந்த காட்சி உண்மையாக நடந்த சம்பவம் - ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்இணையத்தில் வைரலாகும் அர்ச்சனா கல்பாத்தி பேச்சு:

