Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உங்கள் லக்னம் மற்றும் கிரகங்கள் உடல் தோற்றத்தை எவ்வாறு பாதிக்கின்றன?

உங்கள் லக்னம் மற்றும் கிரகங்கள் உடல் தோற்றத்தை எவ்வாறு பாதிக்கின்றன?

Samayam Tamil 3 weeks ago

ந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில் அவருக்கு ராசி, லக்னம் அமைகிறது.

அந்த விதத்தில் ஜாதகத்தில் உள்ள லக்னம் மற்றும் கிரகங்களின் அமைப்பின் அடிப்படையில் அந்த நபருடைய உடல் தோற்றம் மற்றும் குணாதிசயங்கள் அமையும். லக்ன வாரியாக எப்படி அமையும் என தெரிந்து கொள்வோம்.


நீண்ட காலமாக ஜோதிடத்தை கற்பவர்களும், அதில் அனுபவம் பெற்ற நபர்கள், பலருடைய ஜாதகங்களை ஆராய்ந்து இருப்பார்கள்.அத்தகையவர்கள் அவருடைய ஜாதகத்தை பார்த்தே அவருடைய நிறம், உயரம், தோற்றம், முக அமைப்பு என பல விஷயங்களை கணிக்க முடியும். எனவே ஜோதிடத்தை கற்க கூடிய மாணவர்கள், லக்னங்களின் தன்மைகள், குணாதிசயங்கள் குறித்து சரியாக உள்வாங்கிக் கொள்வது அவசியம். ஏனெனில் ஜாதகத்தில் உள்ள லக்னம் மற்றும் கிரகங்கள் மூலம் உடல் தோற்றத்தை எவ்வாறு சரிபார்ப்பது என்பதை கணிக்க முடியும்.ஜாதகக் கணிப்பு

ஜோதிடத்தின் அடிப்படையாக லக்னம், ராசி, நட்சத்திரம், அதற்குரிய அதிபதிகள், ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்களின் அமைப்பு, கிரக சேர்க்கைகள், கிரகங்களின் பார்வை என பல்வேறு விஷயங்கள் கிரகங்கள் மற்றும் லக்னத்தின் மீது விழும் பார்வைகள் ஆகியவற்றின் மூலமே முக்கியமாகக் கணிக்கப்படுகின்றன; வேத ஜோதிடத்தில் இது தேக விசாரம் என்று அழைக்கப்படுகிறது.

அதாவது ஒருவருடைய ஜாதகத்தின் அடிப்படையில் எல்லோரும் தோற்றங்களான நிறம், உயரம், உடல் அமைப்பு மற்றும் ஆளுமையை வெளிப்படுத்துதல், அவருடைய குணாதிசயங்கள் என்ன பல்வேறு விஷயங்கள் லக்னம், லக்னாதிபதி,லக்னம் ராசியின் தன்மை அதாவது அது

  • நெருப்பு அல்லது காற்று, வாயு, நீர் ராசிகள் என அமையப்பெற்றிருக்கும்.
  • ஒருவருடைய லக்னம் நெருப்பு அல்லது காற்று ராசி சேர்ந்தவர்கள் அரிதாகவே உடல் பருமனுடன் இருப்பார்கள்.
  • அதேபோல நிலம் அல்லது நீர் ராசிகள் அமைந்திருந்தால் அந்த நபர் பருத்த உடல் கொண்டவர்களாகவும் அல்லது குண்டான அமைப்புடன் இருப்பார்கள்.

உடலமைப்பின் மீது கிரகங்களின் தாக்கம்

லக்னத்தில் குரு, சந்திரன் மற்றும் சூத்திரம் போன்ற நீர் கிரகங்கள் அமைந்து இருப்பின் அல்லது அவற்றின் பார்வை அல்லது செயற்கைக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருப்பின் அது உடல் பருமனுக்கு காரணமாக அமையலாம்.
மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் ராகு லக்னத்தையும் அல்லது சந்திரனையோ பார்த்தால், அதன் காரணமாக அந்த நம்பரை உடல் மெலிந்த, வறண்ட சருமம், கவர்ச்சியற்ற தேகத்தை கொண்டிருப்பார்.
ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான், லக்னத்தில் அல்லது சந்திரன் பாதித்தல் அந்த நபரின் உடல் கட்டுக்கோப்பானதாகவும், வலிமையாகவும் இருக்கும்.

ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பாக இருப்பின் அவர் சுருள் மூடி, பொலிவான தேகம், அழகான கண்கள் மற்றும் கவர்ச்சியான தோற்றத்துடன் இருப்பார்.


ஜாதக கிரகங்கள் மற்றும் தாக்கம்

லக்னத்தில் சூரியன் இருந்தால் அவருடைய உடல் வலுவாக இருக்கும். ஆனால் தலையில் முடி குறைவாகவே இருக்கும்.
ஜாதகத்தில் சந்திரனின் தாக்கம் இருப்பின் அவர் உடலானது மென்மையாகவும், அழகிய முகமும், பெரிய கண்களும் இருக்கும்.
ஜாதகத்தில் புதனின் தாக்கம் உச்சத்தில் இருப்பின் அவர் நடுத்தர உயரம், பொலிவான சருமம் மென்மையான உடலை கொண்டிருப்பார்.

ஒருவரின் உடல் தேகம் கருமையாக மற்றும் அதிக முடி இருப்பின் அவருடைய லக்னத்திலும் அல்லது ராசியில் சனியின் தாக்கம் இருக்கும்.
ஒருவருடைய லக்னத்தின்படி உடல் தோற்றத்தின் அமைப்பு எப்படி இருக்கும் அவருடைய வெளித்தோற்றம் லக்னத்தையும், மனநிலையானது சந்திரன் அமையப்பெற்ற ராசியையும் சார்ந்ததாக இருக்கும். இனி 12 லக்கினங்கள் கூறிய குணநலன் மற்றும் உடலமைப்பை பார்ப்போம்.


மேஷம், ரிஷப, மிதுன லக்னம்

மேஷ லக்னம்
மேஷ லக்னத்தை சேர்ந்தவர்கள் ஆரோக்கியமான உடல், தன்னம்பிக்கை நிறைந்தவராகவும், கூர்மையான புத்தி, கண்களில் பிரகாசம் ஜொலிக்க கூடியதாக இருக்கும்.
ரிஷப லக்னம்ரிஷப லக்னத்தை சேர்ந்தவர்கள் மிகவும் அழகாகவும், கவர்ச்சியான உடல் அமைப்பு மற்றும் அவர்கள் வெண்மையான அல்லது கோதுமை நிற சிரமம் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு இனிமையான குரலும் அழகான கண்களும் இருக்கும்.
மிதுன லக்னம்மிதுன லக்னத்தை சேர்ந்தவர்கள் புத்திசாலித்தனமானவர்களாகவும், அவர்கள் செயல்பாடுகளில் சுறுசுறுப்பு மற்றும் ஆளுமை இருக்கும். இவர்களின் முகத்தைப் பார்த்தாலே அறிவாளிகள் என சொல்ல கூடிய தாக்கம் இருக்கும். எப்பொழுதும் ஆற்றுளுடன் இருப்பார்கள்.


கடகம், சிம்மம், கன்னி லக்னம்

கடக லக்னம்கடக லக்னம் சேர்ந்தவர்கள் உடல் வெண்மை நிறத்திலும், மென்மையான நபர்களாகவும், நிலவைப் போன்ற பிரகாசமான முகம் கொண்டவர்களாகவும் பொலிவான தேகமும் இருக்கும்.
சிம்ம லக்னம்
இவர்கள் மீது மற்றும் செயல்பாடுகளில் ஆளுமை திறனுடன் இருப்பார்கள். கம்பீரமான தோரணை, பிரகாசமான பெரிய கண்கள் இருக்கும்.
கன்னி லக்னம்
கன்னி லக்னத்தை சேர்ந்த நண்பர்கள் மெலிந்த தேகத்துடன், சீரான உடல், கூர்மையான பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் நல்ல ஆளுமை திறன் இருக்கும். இவர்களின் இளமை நீண்ட காலம் நீடிக்கும்.


துலாம், விருச்சிகம், தனுசு லக்னம்

துலாம் லக்னம்துலாம் லக்னத்தை சேர்ந்த அன்பர்கள் அழகான உடல் அமைப்பு மற்றும் காந்தத்தைப் போல ஈர்க்க கூடிய ஆளுமை, கார்த்திகை மாதம் பேச்சு மற்றும் பார்வை இருக்கும்.

விருச்சிக லக்னம்விருச்சிக லக்னத்தில் சேர்ந்தவர்களின் வலிமையான மற்றும் தசை பிடிப்புள்ள பிடிப்புள்ள உடல் கொண்டிருப்பார்கள். அவர்கள் முகத்தில் தீவிர தன்மையும். ஆழமாக யோசிக்க கூடிய அல்லது மர்மமான சிந்தனை கொண்ட கண்கள் இருக்கும்.

தனுசு லக்னம்தனுசு லக்னத்தை சேர்ந்தவர்கள் உயரமான உடலை, வலிமையான தொடைகள், இருக்கக்கூடிய தோற்றம், தெளிவான முகம் இருக்கும்.


மகரம், கும்ப, மீன, லக்னம்

மகர லக்னம்
மகர லக்னம் சேர்ந்தவர்கள் வயதாகும்போது ஆளுமை திறன் அதிகரிக்கும். இவர்கள் மெலிந்த உடலையும், தீவிரமான முகம், கருமையான நிறம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கும்ப லக்னம்
கவர்ச்சியான கண்கள், உயரமானவர்களாகவும், சமச்சீரான உடல், தனித்துவமான தோற்றம், சிந்தனையில் ஆளுமை, அசாதாரணமான திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
மீன லக்னம்
மீன லக்ன அன்பர்கள் மென்மையான உடல்,உணர்ச்சிமிக்க நபர்களாகவும், சாந்தமான ஆளுமை திறன், முகத்தில் கருணையும், அமைதியின் வெளிப்பாடும் இருக்கும்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil