Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பிக்பாஸில் டாஸ்கின் போது டிடிஎஃப் வாசனை கடுப்பேற்றிய அன்சர். வைரலாகும் வீடியோ!

பிக்பாஸில் டாஸ்கின் போது டிடிஎஃப் வாசனை கடுப்பேற்றிய அன்சர். வைரலாகும் வீடியோ!

TV9 Tamil 4 hrs ago
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டு இருக்கின்றது.
அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளர்களுடன் சேர்த்து மொத்தம் 24 போட்டியாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி தொடங்கி தற்போது 8 வாரங்கள் முடிவடைந்து 9-வது வாரம் சென்று கொண்டு இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். தொடர்ந்து இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சி குழு கொடுக்கும் டாஸ்குகள் பார்வையாளர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து 9-வது சீசன் வரை பிபி ஸ்கூல் என்று போட்டியாளர்கள் ஸ்கூல் ஸ்டூடெண்டுகளாக மாறி விளையாடுவதைப் பார்த்து இருந்தோம். ஆனால் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பிபி திருந்துங்கடா அகடமி என்று வயது முதிர்ந்தவர்களுக்கான பள்ளிக்கூடமாக அந்த டாஸ்க் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியான போதே பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பும் அதிகரித்தது. வீட்டில் உள்ள போட்டியாளர்களில் 4 பேர் அகடமியில் வேலை செய்பவர்களாகவும் மற்றவர்கள் வயது முதிர்ந்த மாணவர்களாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு நபரும் எப்படிப்பட்ட குணாதிசயத்தை கொண்டவர் என்று விளக்கமும் கொடுக்கப்பட்டது.

பிக்பாஸில் டாஸ்கின் போது டிடிஎஃப் வாசனை கடுப்பேற்றிய அன்சர்:

ஆனால் சொன்னது ஒன்னு செய்வது ஒன்னு என்பது போல யாரும் அவர்களுக்கான கேரக்டரில் நிலைத்து விளையாடவில்லை என்பதே பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு இரண்டு நபர்களாக அந்த டாஸ்கை விளையாடுகின்றனர். ஒருவர் சொல்வது பொய்யா அல்லது உண்மையா என்று மற்றொரு பக்கம் உள்ளவர் சரியாக சொல்ல வேண்டும். இந்த நிலையில் பிக்பாஸில் அன்சர் மற்றும் வாசன் இருவரும் அந்த டாஸ்க் விளையாடும் போது அன்சர் வாசனை கடுப்பேற்றும் விதமாக பேசுகிறார். இதனால் வாசன் கோபமடைந்து பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... பிக்பாஸில் அஸ்மிதா - ஜேசனுக்கு கொடுக்கப்பட்ட சீக்ரெட் டாஸ்க்… வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil