Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தனுஷ் ரசிகர் மன்ற கொடி விவகாரம் - விளக்கம் அளித்த சுப்ரமணிய சிவா

தனுஷ் ரசிகர் மன்ற கொடி விவகாரம் - விளக்கம் அளித்த சுப்ரமணிய சிவா

TV9 Tamil 2 weeks ago
மிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் சினிமாவில் உள்ள பிரபலங்கள் தொடர்ந்து அரசியல் ஆர்வம் காரணமாக அரசியலில் களம் இறங்குவது காலம் காலமாக நடைப்பெற்று வருகின்றது.
இப்படி இருக்கும் நிலையில் தான் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக மாறியுள்ளார் தளபதி விஜய். அதன்படி தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெரும் உச்ச நாயகனாக வலம் வந்த நிலையில் தனது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசியலில் ஒரு கட்சியை தொடங்கி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அதிக இடங்களில் வெற்றிப் பெற்று தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் தமிழக அரசியலில் களம் இறங்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. இந்த செய்தி தமிழ் சினிமா வட்டாரங்களில் மட்டும் இன்றி மக்களிடையேயும் அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது. மேலும் அவரது கட்சி கொடி என்று ஒரு கொடியும் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சி தொடங்குகிறாரா தனுஷ்?

இந்த நிலையில் சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள அர்ஜுனன் பேர் பத்து என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநரும் நடிகருமான சுப்ரமணிய சிவா தனுஷ் அரசியல் கட்சி தொடங்குவதாக வெளியான செய்தி குறித்து வெளிப்படையாக பேசினார்.

அதில் அவர் கூறியதாவது, இந்த தனுஷின் ரசிகர் மன்ற கொடி எங்களிடம் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது.
... Kayadu Lohar: நான் எப்போது STR சாருடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாலும்.. கவலையாக பேசிய கயாடு லோஹர்! ஒவ்வொரு வருடமும் தனுஷ் ரசிகர்கள் மன்ற மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும்.

அப்படி சமீபத்தில் நடைப்பெற்ற கூட்டத்தில் சில ரசிகர்கள் கொடியை காரில் வைப்பது போன்று தயார் செய்து எடுத்து வந்தார்கள். அந்த கொடியை நாங்க மாட்டியது இணையத்தில் புதிய கொடி அறிமுகம், கட்சி ஆரம்பிக்கிறார் என்று செய்தி வெளியாகிவிட்டது என்று சுப்ரமணிய சிவா விளக்கம் அளித்துள்ளார்.
... விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் கதை இதுதான் - தயாரிப்பாளர் ஓபன் டாக்
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil